இரு கிளைகள்

சாகும் நேரம் சாமரம் வீச வந்தீர்களா?
எப்போதும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊர் ஒப்ப ஒப்பாரிகள் வேண்டாம்.

ஒரே தகப்பன் மக்கள் தான் அவர்கள்.
ஆனால் தாய் வெவ்வேறாக இருந்தார்கள்.
முத்த குடியாள் மகனையும் மகளையும் குழந்தை நேசித்து பழகிய இளைய குடியாள் மக்கள்,
தகப்பனார் இறந்த பிறகு பிளவுபட்டார்கள்.

உயிர்க்கு போராடுகிறான் அன்பு சகோதரன் எனத் தெரிந்ததும் தன் மகனை அழைத்து பார்த்துவருமாறு இளைய குடியாள் சொல்ல, " உன் அண்ணனை பார்க்க நீயும் வா. பார்த்து வரலாம். ",என்றான் மகன்.

தாயோ வர மறுத்தாள். மகனும் செல்லவில்லை.

ஒருவாரம் கடந்திருக்கும்.
சகோதரன் இறந்தான் என்கிற செய்தி கேட்டு,
தன் மகனை அழைத்து துக்கத்திற்கு சென்றுவருமாறு கூறினார் அந்தத்தாய்.

உயிருள்ள போது சென்று காணாதவருக்கு மதியாதவருக்கு உயிர் போன பின் அவர் துக்கத்திற்கு சென்றால் எப்படி?
மகனுக்கோ அங்கு செல்ல மனம் ஒப்பவில்லை.

எதற்காக பகைமை கொண்டோம் என்பதே தெரியாது.
ஆனால் காலப்போக்கில் பழக்க வழக்கங்களிலும், நன்மை தீமை விஷேசங்களிலும் கலந்துகொள்வது நின்றுவிடுகிறது.
ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து அன்பாக பேசக்கூட தயாராக இருப்பதில்லை.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Jul-18, 10:21 am)
Tanglish : iru kilaikal
பார்வை : 938

மேலே