என் நேரம்

என் கடிகாரத்தின் முட்களை
களவாடிவிட்டு
என்னிடம் கேட்கிறீர்கள்
உன்னிடம்தான் கடிகாரம்
இருக்கின்றதல்லவா என்று .
ஆம்
கடிகாரம் என்னிடம்தான் இருக்கின்றது
அதன் முட்கள் உங்களிடம்தான் இருக்கின்றன.
ஆனாலும் தெரியவில்லை ,
எனக்கான நேரம்
யாரிடம்
இருக்கிறதென்று .

எழுதியவர் : பா.நிபி (30-Jul-18, 1:18 pm)
சேர்த்தது : பா நிபி
Tanglish : en neram
பார்வை : 68

மேலே