மின்னணு பூக்கள்

நீங்கள் என்னை கேவலமாக பார்க்கிறீர்கள்
எனக்கு புலனத்தில் கணக்கு இல்லை என்பதால் .
நீங்கள் என்னை கேவலமாக பார்க்கிறீர்கள்
என்னிடம் திறன்பேசி இல்லை என்பதால் .
நீங்கள் என்னை கேவலமாக பார்க்கிறீர்கள்
எனக்கு 'தொழில்நுட்ப அறிவு' இல்லை என்பதால் .

இப்போது நான் பார்க்கிறேன்
உங்களை கேவலமாக ...
மனித பூக்களின் அசைவுகளை
போனிற்குள் புதைத்த புத்திசாலிகள் என்பதால்
உரையாடல்களின் மழைத்துளிகளில்
நனைய இயலா மின்னணு பூக்கள் என்பதால்...

எழுதியவர் : பா.நிபி (30-Jul-18, 1:52 pm)
சேர்த்தது : பா நிபி
Tanglish : minnanu pookal
பார்வை : 67

மேலே