புதைந்த சிலை 9

பக்கத்து ஊரில் காவலர்களை நியமித்து விட்டு பின் அவர்களை விசாரித்தார் யாராவது வருவார்களா திட்டம் ஏதாவது இருக்கின்றதா என்று அப்பொழுது காவலர் ஒருவர்
இந்தப் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் இடையே ஒரு பெரிய காடு இருக்கின்றது. ஒரு சிலர் வாழ்கின்றனர் ஆள்நடமாட்டம் தான் காணப்படுகின்றது. அவர்கள் வித்தை காட்டுபவர்கள் மற்றும் குறவர்கள் ..... என்று முடித்தார்.

அதிகாரி மோகினி மேலும் கேள்வி எழுப்பினார் அவர்களிடம் ஏதாவது விசாரித்தீர்களா? அதில் ஏதாவது சொன்னார்களா? என்று கேட்டார்.

கேட்டோம் யாராவது உங்களை தாண்டி அந்த ஊருக்குச் சென்று இருக்கின்றார்களா? தெரியாத நபராக இருந்தார்களா? என்று கேட்டோம் .அவர்கள் அதற்கு நாங்கள் இப்பொழுது தான் வந்திருக்கிறோம். எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.

மோகினி மிகவும் குழப்பத்துடன் வேறு யாராவது ஊருக்குள் நுழைந்தார்கள் பார்த்தீர்களா என்று கேட்டார் அப்பொழுது ஒரு முனிவர் போல தாடி வைத்துக்கொண்டு அந்த காட்டில் தான் சுற்றி வந்து இருக்கின்றார். அவர் பேசுவது புரியவில்லை மேலும் அவரை பார்க்கவில்லை என்று கூறினர்.
அந்த ஆலமரத்தின் கீழ் இருந்த அந்த முனிவர் ஆக இருக்க வேண்டும் என்று அவரை அழைத்து வருமாறு அதிகாரி மோகினி உத்தரவிட்டார் அவர் மூலம் ஏதாவது திருப்பம் ஏற்படும் இந்த வழக்கில் என்று நினைத்தார்.

காவலர்களும் சென்றனர் சென்று வெகு நேரமாகியும் அவர் எங்கேயும் இல்லை. என்னவாயிற்று என்று கேட்டார் அதிகாரி மோகினி .
அவர் இல்லை வெகுநேரமாகியும் அவர் காணவில்லை என்று கூறினர்
காவலர்கள்.
பின்பு இன்று இரவு அவர் உங்கள் கண்களில் பட்டால் காவல் நிலையத்திற்கு அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்.
அன்று இரவு உணவருந்திவிட்டு அங்குமிங்கும் திரிந்து இருந்தார் காவலர்கள் அவரைப் பார்த்தார்கள்.
ஐயா சிலை திருட்டு வழக்கில் உங்களை விசாரிக்க வேண்டும் காவல் நிலையம் வாருங்கள் என்று அழைத்தனர்.
என்னால் வர இயலாது என்று கூறி விட்டு திடீரென்று ஓட ஆரம்பித்தார். எடுக்கவில்லை என்றால் ஏன் போட வேண்டும் என்று காவலர்கள் அவரை ஓடி பிடித்தனர் பின் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதிகாரி மோகினி அவரை விசாரிக்க ஆரம்பித்தார் நீங்கள் யார் உங்கள் பெயர் என்ன?
என் பெயர் லிங்கம். நான் நான்கைந்து ஊரில் யாசகம் கேட்டு வாழ்பவன் என்று முடித்தார்.
பூசாரியிடம் பேசியது நீங்களா என வினவினார் அதிகாரி மோகினி?
ஆம் நான் தான் பேசினேன்!! என்ன பேசுறாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா என்றார் மோகினி.
எது நடக்கப்போகின்றது அது நன்றாகவே இருக்கும் அனைத்தும் நல்லதுக்கே என்றுதான் சொன்னேன் பூசாரியிடம் அவர் முகமே குழப்பமாக இருந்தது அதனால் அப்படி சொன்னேன் என்று முடித்தார் ஆலமரத்து லிங்கம்.
உங்களுக்கு கோவிலை பற்றி ஏதாவது தெரியுமா?
இல்லை எனக்கு எதுவும் தெரியாது.
காவல்நிலையம் வராம ஏன் நீங்க
ஓட்ட தொடங்கு நீங்க......
எனது காவலர் என்றால் பயம் அதனால் எனக்கு இங்கு வர விருப்பமில்லை எனவே ஓடினேன்....

இவர் பேச்சில் ஏதோ தெரிகிறது ஆனால் என்னவென்று தெரியவில்லை என்று மோகினி தீர்மானம் செய்தார் .பின்பு நான் கூப்பிடும் போது கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறிவிட்டு அனுப்பிவிட்டார் .இவரை பின்தொடரும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இவர் கைரேகையை பெற்றுக்கொண்டார் கைரேகையுடன் ஒப்பிட்டால் ஆனால் இவரது கைரேகையும் அத்துடன் ஒத்துப்போகவில்லை. யார் தான் செய்திருப்பார்கள் என்று மிகவும் குழப்பத்துடன் இருந்தார். இந்த ஊருக்கும் அடுத்தவருக்கும் நடுவே ஒரு சிறிய அடர்ந்த காடு ஒன்று உள்ளது அதில் சில மக்கள் வாழ்கின்றனர்.
மறுநாள் அந்த காட்டிற்குச் சென்றார் அங்கிருக்கும் மக்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார். நீங்கள் எப்பொழுது இங்கு வந்து அடைக்கலம் அடைந்தீர்கள் என்று கேட்டார் அதிகாரி.
அதற்கு மக்களும் இப்பொழுதுதான் வந்தோம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக என்று பதில் கூறினர். அப்போதுதான் தெரிந்தது சிலை திருட்டு போன அடுத்த பத்து நாட்களுக்கு அப்புறம் தான் இவர்கள்
குடிபெயர்ந்தனர் என்று.
அந்தக் காட்டை வெகுநேரமாக பார்த்துவிட்டுச் சென்றார்.
அடர்ந்த காடு முள் வெளிகள் ஆனால் அந்த இடத்தில் ஒரு ஜீப் வந்து போனது போன்று அடையாளம் இருந்தது. அதைப் புகைப்படம் எடுக்கச் சொல்லிவிட்டு
அந்த அடையாளம் எது வரை செல்கிறது என தொடர்ந்தார். களிமண் பாதைகளில் சில அடையாளங்கள் தெரிந்தது அதற்கு மேலே ஒரு சிறிது தொலைவிற்கு மேலே தெரியவில்லை அதுவரையும் அவர் தொடர்ந்தார்.
அந்த அடையாளம் ஒரு குழிக்கு முன்னே நின்று விட்டது.
அது என்ன குழி அதற்கு மேலே வண்டிகள் செல்லாதா அது என்ன
குழி ? என்றார் மோகினி.
அதற்கு அந்த மக்கள் குளம்வெட்டி இருப்பார்கள்போல தண்ணீர் இல்லாததால் குழியாய் தோன்றுகிறது என்று பதில் கூறினார்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு அதிகாரி மோகினி காவல்நிலையம் விரைந்தார் என்னதான் நடக்கிறது சில யார் எடுத்திருப்பார்கள் என்று வெகு நேரமாக யோசித்துவிட்டு தன் வீடு திரும்பினார்.

சிலை கிடைக்குமா ?யாருடையது
அந்த ஜீப் ?

எழுதியவர் : உமா மணி படைப்பு (31-Jul-18, 9:10 am)
சேர்த்தது : உமா
பார்வை : 99

மேலே