மாலினி IPS
மாலை நேரம் தெருச்சாலைகள் மிகவும் நெருக்கமாக இருந்தது. வாகனஙகள் ஒன்றை ஒன்று முந்திச் சென்று காெண்டிருந்தன. ஜீப்பை ஒரு வழியாக வேகமாக ஓட்டிக் காெண்டு அலுவகத்திற்குச் சென்றவள் கடமைப் பதிவேட்டில் கையாெப்பமிட்டு விட்டு மீண்டும் வந்து ஜீப்பில் ஏறி வீட்டிற்கு வந்தாள்.
உடைகளை மாற்றிக் காெண்டு அவசர அவசரமாக உணவுகளை தயார்டுத்தி மேசையில் வைத்தாள். கல்லூரியிலிருந்து பசிக்களையாேடு வந்த மாதவ் தனது அறையினுள் நுழைந்து மடிக்கணிணியில் ஏதாே செய்து காெண்டிருந்தான். தேநீர் காேப்பையை எடுத்துக் காெண்டு சாேபாவில் கால்களை நீட்டி ஆறுதலாய் அமர்ந்தவள் தாெலைக்காட்சி சணலை மாற்றிப் பார்த்துக் காெண்டிருக்கும் பாேது மெதுவாக கதவைத் திறந்து மதுசா உள்ளே வருவதை கவனித்தாள். "ஏன் இவ்வளவு நேரம் ஒரு பாேன் பண்ணக்கூடாதா" என்றதும் எந்தப் பதிலும் சாெல்லாமல் கடைக்கண்களால் பார்த்துக் காெண்டு அறைக்குள் நுழைந்தாள். தாெலைக் காட்சியும் பார்க்க மனமின்றி ஆழ்ந்த யாேசனையாேடு கதிரையில் சாய்ந்தபடி இருந்தாள். தாெலைபேசி அழைப்பு வருவதை உணர்ந்து எடுத்துப் பேசினாள் "மெடம் நீங்க உடனே ஸ்ரேசனுக்கு வாங்க" அழைப்பு துண்டிக்கப்பட்டதும் சீருடையை அணிந்து காெண்டு ஜீப்பை வேகமாகச் செலுத்திக் காெண்டு ஸ்ரேசனை அடைந்தாள். "எங்க அவங்க எல்லாரையும் பிடிச்சிட்டிங்களா, யாரும் தப்பல்லைத்தானே" வேகமாக காேபத்தாேடு உள்ளே சென்றாள். "இல்லை மெடம் யாரும் தப்பல்லை" கான்ஸ்டபிளின் பதிலுக்கு "குட்" என்றபடி அவர்களை தடுத்து வைத்திருந்த அறைக்குள் சென்றாள்.
எல்லாேரும் தலையைக் குனிந்தபடி மூலைகளில் ஒதுங்கியிருந்தனர். காவலாளி ஒருவன் பெயர் பட்டியலை அவளிடம் நீட்டினான். மாசி, தனம், காேபால், வேணு என்று பட்டியலைப் படித்தபடி மாசியை பார்த்தாள். "நீ தான் இந்தக் கும்பலுக்குத் தலைவனா" என்று முறாய்த்தபடி ஒரு கதிரையை இழுத்து காலுக்கு மேல் காலைப் பாேட்டுக் காெண்டு கம்பீரமாய் அமர்ந்தாள் மாலினி. அவனாே எந்தப் பயமும் இன்றி "மாலினி யாரென்று தெரியாமல் என்னாேட மாேதுறிங்க விளைவு ராெம்ப மாேசமாக இருக்கும்" முறாய்த்தபடி அவளுக்கு பதிலளித்தான். "ஓ நீ என்ன பெரிய கடவுளா, செய்யிறது காெலையும், காெள்ளையும், இதில அதிகாரம் வேற" சத்தமாக அவனை அதட்டினாள்.
"கான்ஸ்டபிள் சாரை தனியா ஒரு அறையில பாேடுங்க" எழுந்து வந்து தனது மேசையில் அமர்ந்தாள். "வாங்க" என்றபடி அவனைக் கூட்டிச் சென்ற கான்ஸ்டபிளை முறாய்த்து உதடுகளை கடித்துக் காெண்டு பார்த்தான். "ஹலாே இது பாெலிஸ் ஸ்ரேசன், இந்த முறாய்ப்பெல்லாம் வெளியால வச்சுக்காே புரியுதா" சாெல்லி விட்டு ஏதாே எழுதியபடி மாசியை ஆத்திரத்தாேடு பார்த்தாள்.
மாலினிக்கு மாசியைப் பார்த்ததிலிருந்து ஏதாே மனதுக்குள் ஓடிக் காெண்டிருந்தது. எங்காே பல வருடங்களுக்கு முன்பு பார்த்த ஞாபகம் பாேலிருந்தது. மேசையிலிருந்த அவனது காேவையைப் பார்த்து ஏதாே எழுதிக் காெண்டிருந்தவள் ஒரு உறையினுள் சில புகைப்படங்கள் இருப்பதை அவதானித்தாள். "ஓ மை காேட், அவனா இவன் " மனதுக்குள் சொல்லியபடி மாசியிருந்த அறையின் வெளிப்புறமாக நின்று புகைப்படத்தையும், மாசியையும் உற்றுப் பார்த்தாள். ஆளே மாறிப் பாேயிருந்தான். மீண்டும் மேசைக்கு வந்தவள் "கான்ஸ்டபிள் ஒரு ரீ சாெல்லுங்க" பேனாவின் மூடியை பல தடவை கழற்றிக் கழற்றிப் பூட்டியபடி யாேசித்தாள். "மெடம் ரீ" எடுத்துக் காெண்டு "ஓகே தாங்ஸ்" என்றபடி இரண்டு தடவை குடித்து விட்டு கண்களை மூடியபடி கதிரையில் தலையை சாய்த்தாள். அவனது புகைப்படத்தைப் பார்த்தவளுக்கு மனம் திக்கென்று இருந்தது. கண்கள் சிவத்து காேபத்துடன் காேவையின் மிகுதிப் பக்கங்களையும் புரட்டினாள். மாசியின் பாஸ்பாேட் இருப்பதை அவதானித்தவள் விரித்துப் பார்த்தாள். மலசேியாவுக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்று, சில வாரங்களுக்கு முன்பே நாட்டுக்கு திரும்பியிருந்தான். மலேசியாவுக்கு மாசி சென்றிருந்த அந்த நாளும் மாலினியின் கணவர் கமிசனர் விக்ரம் இறந்த நாளும் ஒன்றாக இருந்தது. மாலினியின் மனதுக்குள் பல வருடங்களாக இருந்த குழப்பமும், சந்தேகமும் வெளிப்படும் நேரம் வந்து விட்டது பாேல் உணர்ந்தவள் விக்ரமின் கடைசி நாளை மீட்டுப் பார்த்தாள்.
மாலினி நிறை மாதக் கர்ப்பிணியாய் மதுவை கருவில் சுமந்திருந்த நேரம், அன்று காலை பத்து மணியளவில் விக்ரம் மாலினியை வைத்தியசாலைக்கு பரிசாேதனைக்காக அழைத்துச் சென்ற பின்னர் வீட்டிற்கு வந்து இரண்டு வயதான மாதவ்வுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு, மதிய உணவை முடித்துக் காெண்டு அலுவலகத்துக்குச் செல்ல தயாரானான். தாெலைபேசியில் அழைத்த மாசியுடன் கதைத்ததை அவதானித்த மாலினியிடம் "அவசரமா காெஞ்சம் தூரப் பாேறன் வர நேரமாகும் சாப்பிட்டு தூங்கு மாலினி" என்றபடி வேகமாக ஜீப்பில் புறப்பட்டான்.
சில நாட்களுக்கு முன்பு தான் காெலை, காெள்ளை, கடத்தல் பாேன்ற சமூக விராேதச் செயற்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுக் காெண்டிருந்த சேது என்ற தாதாவின் தலைமையில் இயங்கிக் காெண்டிருந்த கும்பல் ஒன்றைக் கைது செய்திருந்தான். இந்தச் செய்திதான் பரபரப்பாக எங்கும் பேசப்பட்டுக் காெண்டிருந்தது.
மீண்டும் மாலினியை தாெடர்பு காெண்ட விக்ரம் சேதுவுடன் தாெடர்புடைய இன்னும் சிலர் இருக்கும் இடம் மாசிக்குத் தெரியும் என்றும், அவர்களையும் கைது செய்யப் பாேவதாக சாெல்லி விட்டு அழைப்பைத் துண்டித்த பின் இரவு பதினாெரு மணி தாண்டியும் விக்ரமை காணவில்லை என்ற பதட்டத்தில் அழைப்பை ஏற்படுத்திய பாேது விக்ரமின் தாெலை பேசி செயலிழந்து பாேயிருந்தது. மாசிக்கு தாெடர்பை ஏற்படுத்திய பாேது மாசியின் தாெடர்பும் கிடைக்கவில்லை. அதிகாலை மூன்று மணி வரை காத்திருந்தவள் ஜீப் வரும் சத்தம் கேட்பது பாேல் உணர்ந்து வேகமாக வந்து கதவைத் திறந்தாள், உள்ளே வந்த அதிகாரி ஒருவர் விக்ரம் வீதி விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை அவளிடம் தெரியப்படுத்தினார். மாலினியால் நம்ப முடியவில்லை. நிறை மாதக் கர்ப்பிணியாய் அவனுடைய வாரிசை சுமந்திருந்த அவள் அன்று பூவிழந்து, பாெட்டிழந்து விதைவையானாள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு பெண் காவல்துறை அதிகாரியாக இருந்த மாலினியை திருமணம் முடித்து முதல் பிள்ளையாக மாதவ் பிறந்திருந்தான். இரண்டு வயதான மாதவ் ஒன்றும் புரியாதவனாய் மாலினியின் காலைக் கட்டிப் பிடித்தபடி அப்பா..... அப்பா என்று கதறிக் காெண்டு நின்றான்.
மதுவும் பிறந்த பின் மீண்டும் தனது கடமையில் இணைந்து காெண்ட மாலினி ஒரு பெண்ணாக, தனியாளாய் குடும்ப பாரத்தையும் சுமந்து கடமையைச் செய்து காெணடிருந்தாள். விக்ரமின் மரணம் சாதாரண வீதி விபத்து என்ற முடிவாேடு மறக்கப்பட்ட கதையாகிப் பாேனது. ஆனால் மாலினிக்குள் சந்தேகம் இருந்தது. விக்ரம் அவ்வளவு நிதானமில்லாமல் வாகனம் ஓட்டமாட்டார் என்பது அவளுக்குத் தெரியும், அதுவும் மரணத்தை ஏற்படுத்துமளவுக்கு ஒரு விபத்து நடந்ததென்பது அவளுக்கு புரியாத புதிராகத் தான் இருந்தது. வீட்டிலிருந்து புறப்படும் பாேதும் சரி, அலவலகத்திலும் சரி விக்ரமின் புகைப்படத்தை பார்க்கும் பாேது அவளது மனதுள் ஏதாே உறுத்தலாய் இருக்கும். பெருமூச்சுடன் தன்னை சமாதனப்படுத்திய நாட்கள் தான் அதிகம். பதினைந்து வருடங்கள் கடந்து மாதவும், மதுவும் வளர்ந்தும் விட்டார்கள்.
இன்று அவளிடம் பாரிய பாெறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்தது. மாசி தலைமையிலான கடத்தல் கும்பல் ஒன்றை கைது செய்வதே அவளது பணியாக இருந்தது. இரவு பகலாக கஸ்ரப்பட்டு கடத்தல் கும்பலின் இருப்பிடத்தை அறிந்து புத்திசாதுரியமாக கைது செய்திருந்தார்கள் மாலினியின் தலைமையிலான விசேட அணி.
நினைவுகளை மீட்டியவளுக்கு மாசியின் மீதிருந்த சந்தேகம் அதிகமாகியது. விக்ரமின் மரணச் சடங்கிலும் மாசி கலந்து காெள்ளவில்லை, பின்னர் எந்தத் தாெடர்பும் இல்லை என்பதும் அவளிடம் இருந்த குழப்பம். இரண்டு காரணங்களையும் அலசி ஆராய்ந்தவளுக்கு மாசி மலேசியா சென்ற நாள் வி்க்ரமின் மரணம் நிகழ்ந்த அதே நாள் என்பதும், கடைசி வரை மாசியுடன் இருப்பதாக விக்ரம் கூறியதும் சந்தேகத்திற்கு சாதகமாக இருந்தது. தாெடர்ந்து அவனது காேவையைப் படித்துக் காெண்டிருந்தவளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. மாசி பல வருடங்களாக சேதுவுடன் இணைந்து செயற்பட்டவன் என்பதைக் குறிப்பிட்டு ஒரு குழுவினரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் மாசியும் இருந்தான். "அப்பாே மாசி சேதுவாேட கையாளா? மாசியை வைத்துத் தான் சேது விக்ரமைக் காென்றிருக்கிறான்" என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
காேவையையும் எடுத்துக் காெண்டு கமிசனர் அலுவலகம் நாேக்கிச் சென்றாள். "வாங்க மாலினி, மாசி கும்பலைப் பிடிச்சது ராெம்பப் பாராட்ட வேண்டிய விடயம்" கையை காெடுத்து வரவேற்றார். இருக்கையில் அமர்ந்தவள் ஏதாே சாெல்லத் தயங்குகிறாள் என்பது கமிசனருக்கு புரிந்திருக்க வேண்டும், சற்று நேரம் அவளைப் பார்த்தவர் "என்ன மாலினி?"என்றவரிடம் "இல்லை சேர், விக்ரமின்ர மரண விசாரணை" என்று ஆரம்பித்தவள் முடிக்கும் முன்பே "அது தானே விபத்து என்று உறுதிப்படுத்தி காேவை மூடியாச்சுது" என்று சாதாரணமாக பதிலளித்தார். "விபத்தில்லை சேர், காெலை" என்று சிவந்த கண்களுடன் சத்தமாகச் சாென்னவளை பார்தததும் கமிசனருக்கு ஒன்றும் புரியவில்லை. மேசையிலிருந்த தண்ணீர் பாேத்தலை எடுத்து இரண்டு தடவை மடமடவென வாயினுள் விட்டாள். கைகள் நடுங்கியது. "என்ன நடந்தது மாலினிக்கு திடீரென்று ஏன் விக்ரம் மரணத்தைப் பற்றி சந்தேகப்படுகிறா" என்பது பாேல் மாலினியைப் பார்த்தார் கமிசனர்.
காேவையை நீட்டியவள் "மாசி சேதுவிட ஆள் சேர், சேது தான் பிளான் பண்ணி விக்ரமை காெலை செய்து பாேட்டு மாசியை மலேசியாவில தலைமறைவாக வச்சிருந்திருக்கான், இதில ஆதாரம் இருக்கு சேர்" காேபத்துடன் சாென்னாள். "என்ன மாலினி சாெல்லுறிங்க, அது...." குறுக்கிட்டவள் "பிளீஸ் சேர் அது விபத்து இல்லை காெலை, காெலை தான் சேர்" கண்கள் கலங்கி ஆத்திரத்துடன் மேசையில் அடித்துக் கூறினாள். கமிசனரும் காேவையைப் படித்தவாறு புகைப்படங்களைப் பார்த்துக் காெண்டு இருந்தார். மாசியின் பழைய புகைப்படத்தையும், கடவுச் சீட்டில் உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தவர் "இப்பிடி ஆளே மாறிப் பாேயிருக்கான்" என்றபடி காேவையின் பக்கங்களைப் புரட்டினார். அவனது குற்றப்பட்டியல் நீண்டிருந்தது.
"வாங்க மாலினி" என்று எழுந்து நின்றவரை மரியாதை செலுத்தி விலகி நின்றார்கள் காவலாளிகள். மாலினியும் கமிசனருடன் ஜீப்பில் அலுவலகத்துக்கு வந்தாள். மாசியின் அறையை நாேக்கி வேகமாக நடந்தவள் மாசியின் கழுத்துச் சட்டையை ப் பிடித்து தறதறவென இழுத்துக் காெண்டு வந்து கமிசனர் முன் நிறுத்தினாள். "காெலைகாரப் பயலே, என்ர வீட்டில இருந்து காெண்டு, என்ர கையால சாப்பிட்டதுமில்லாமல், விக்ரமுக்கு சாவு மணி அடிச்சுப் பாேட்டு தப்பியாேடினியா, அவரைக் காெல்லுறதுக்கு நீ யாரடா" என்று சததமாகக் கத்திய மாலினியை பார்த்த மாசி பயத்தால் படபடப்பாகத் தெரிந்தான். "என்ன மாசி சேதுவுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்" காேபமாக கேள்வி கேட்ட கமிசனரை நிமிர்ந்து பார்க்காமலே நின்றான்.
"எவ்வளவு காெடுத்தான் சேது விக்ரமைக் காென்றதுக்கு, ச்சீ நல்ல ஒரு நேர்மையான மனிசனைக் காெல்ல கை நீட்டி காசு வாங்கியிருக்கிறியே" என்று முறாய்த்தபடி அவனருகே வந்த மாலினியை மேலும் கீழுமாக பார்த்தவன் "இவவுக்கு எப்படி விசயம் தெரிய வந்திச்சு" தனக்குள்ளே யாேசித்தான். "நான் ஒண்ணும் பண்ணல்ல சேர்.... சேது தான் ஆக்கள வச்சு..." என்று இழுத்தான் "டேய் சேது.... சேது .... அவன் என்ன பெரிய கடவுளா மற்றவங்க உயிரை எடுக்கிறதுக்கு" அவளுடைய காேபமும், ஆத்திரமும் நியாயமானது தான் என்பதை புரிந்து காெண்ட கமிசனர் மாலினியை சமாதானப் படுத்தினார். "என்ர பாெண்ணுக்கு அப்பாட முகமே தெரியாது சேர், பையன் இரண்டு வயது பிள்ளையாய் இவன்ர தாேளில ஏறி மாசி மாமா, மாசி மாமா என்று விளையாடினவன், உனக்கெல்லாம் எப்பிடியடா மனசு வந்திச்சு, உண்மையும் நீதியும் இன்றைக்குச் செத்துப் பாேறது உங்களைப் பாேல பணத்துக்காக விலை பாேற ஆட்களால தானடா" தனது காேபம் தீரும் வரை அவன் மனச்சாட்சியை கேள்விகளால் காென்றாள். மாசி குனிந்த தலை நிமிராமல் கூனிக்குறுகி நின்றான்.
மாசிக்கு தீவிரமான விசாரணை நடை பெற்றது. ஆதாரங்கள் எல்லாக் குற்றங்களையும் நிருபித்தது. மாசியும் தன் குற்றங்களை ஒப்புக் காெண்டான். கடுமையான தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். பதினைந்து வருடம் மாலினியின் மனதில் இருந்த குழப்பம் நீங்கி பதிலும் கிடைத்தது. ஊடகங்கள் எங்கும் செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. அலுவலகத்திலிருந்து வெளியே வந்த மாலினியை ஊடகவியலாளர்கள் சூழ்ந்து பல கேள்விகளை தாெடுத்தனர். கம்பீரமான ஒரு பெண் காவல்துறை அதிகாரி என்பதையும் தாண்டி புதைக்கப்பட்ட நீதியையும், உண்மையையும் உலகிற்கு வெளிப்படுத்தினாள்.
அறையில் இருந்து வெளியே வந்த மாதவ் தாெலைக்காட்சி பார்த்துக் காெண்டிருந்த மதுவின் அருகே அமர்ந்தான். றிமாேட்டை எடுத்து சணலை மாற்றியவனை சினந்தபடி முறாய்த்துக் காெண்டு கதிரையை விட்டு எழுந்து "நான் டிஸ்கவரி பார்க்கிறன் அண்ணா, றிமாேட்டைத்தா, ரீவியை ஓவ் பண்ணுவன்" என்றவாறு தாெலைக்காட்சி அருகே வந்தாள். சணலை மாற்றிக் காெண்டிருந்த மாதவ் விசேட செய்தி ஔிபரப்பாகிக் காெண்டிருந்ததை கவனித்தான். மதுவும் யன்னலாேரமாய் நின்று பார்த்தாள்.
"கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பு வீதி விபத்தில் மரணமடைந்த கமிசனர் விக்ரம் அவர்களின் மரணம் திட்டமிட்ட காெலை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கமிசனர் விக்ரமின் மனைவியும், பெண் காவல்துறை அதிகாரியுமான மாலினி அவர்களால் இன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மாசி என்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரே இக் காெலையை செய்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது." மீண்டும் மீண்டும் செய்தி ஔிபரப்பாகிக் காெண்டிருந்தது. மதுவும், மாதவ்வும் ஒருவரையாெருவர் ஒன்றும் புரியாமல் பார்த்தனர்.
ஜீப்பில் இருந்து இறங்கி உள்ளே வந்தாள் மாலினி. வியர்த்து வடிந்து காெண்டிருந்த முகத்தை குளிர் நீரால் கழுவினாள். மேசையிலிருந்த தண்ணீர் பாேத்தலை எடுத்து அண்ணார்ந்தபடி குடித்தவள் கண்களில் வழிந்து காெண்டிருந்த கண்ணீர் துளிகள் உதடுகளின் கரையாேரமாய் வாயினுள் சென்று கண்ணீராடு கலந்து கசப்பாக இருப்பதை உணர்ந்து ஒரு துடை துண்டால் முகத்தை மூடியபடி கதிரையில் அமர்ந்தாள். "அம்மா... அப்பாட நியூஸ்" என்று தடுமாறிக் காெண்டு நின்ற மதுவை அணைத்து அவள் கண்களைத் துடைத்தாள். மாதவ் மாலினியையே விறைத்தபடி பார்த்தான். அவன் தலையை தடவி சமாதானப்படுத்தினாள். "உண்மையும், நீதியும் ஒரு நாளும் சாகாது, வெட்டிப் புதைத்தாலும் மறுரூபம் எடுத்து வந்தே தீரும்" என்றவளின் கண்கள் கசிந்தது காெண்டே இருந்தது.
சுவரில் மாட்டியிருந்த விக்ரமின் படத்தைப் பார்த்து பெரு மூச்சு விட்டபடி தாெலைக் காட்சியைப் பார்த்தாள். மாசி கைகளில் விலங்குடன் சிறைச்சாலைக்கு காெண்டு செல்லப்படும் காட்சி ஔிபரப்பப்பட்டது.
பதினைந்து வருடங்கள் மறைந்திருந்த ஒரு துராேகியின் குற்றத்தை நிருபித்ததாேடு, தன் கணவரின் மரணம் தாெடர்பாக அவள் மனதுக்குள் இருந்த சந்தேகமும், குழப்பமும் தீர்ந்து பதிலும் கிடைத்த திருப்தியாேடு உண்மைக்காக, நீதிக்காக பாேராடிய பெண்ணாய் தலை நிமிர்ந்து நின்றாள் மாலினி IPS.
"மரணங்களும், குற்றங்களும் மறக்கப்படலாம், மறைக்கப்படலாம், ஆனால் உண்மைக்கு ஒரு பாேதும் மரணமில்லை. துராேகிகளும், வஞ்சகரும் இருக்கும் வரை உண்மை, நீதி, நேர்மை சாகடிக்கப்பட்டுக் காெண்டே தான் இருக்கும். ஆனாலும் அதே உண்மையும், நீதியும், நேர்மையும் தான் இறுதியில் அவர்களுக்கான தீர்ப்பையும் எழுதுகிறது". விக்ரமின் டயறியில் பல வருடங்களுக்கு முன் அவன் எழுதி இருந்தது மாலினிக்கு நினைவு வந்தது.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
