நிலா பேரழகிக்கு மணி மகுடம்

நிலா வீசும் எழில் நீல வானம்
நினைவில் வீசும் தென்றலின் இன்பம்
அந்திப் பொழுதின் ஆரஞ்சு வண்ணம்
அழகிய மலர்கள் சிரிக்கும் மாலைத் தோட்டம்
மௌனமாய்க் கவியும் அந்தி நேரம்
மெல்ல வருகை புரியும் இரவுப் பொழுதினில்
வைரமாய் மினுங்கும் வான் நட்சத்திரங்கள்
நிலா பேரழகிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-18, 8:49 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே