பசி , வெறி சூறையாடல்

இரவு நேரம்
பாவம் அந்த ஈ
காலையில் வீட்டின் உள்ளே
வந்தது வெளியில் போக தெரியாது
வீட்டின் உள்ளேயே அலைய
இரவில் பார்வையும் மங்க
சுவரில் உட்கார்ந்தது
மங்கிய விளக்கொளி
எங்கிருந்தோ அந்த சுவரின் மீது
மெல்ல ஊர்ந்து வந்தது ஓர்
பெரிய கருப்பு பல்லி!
ஈ சுவரில் இருப்பது பல்லியின்
மூக்கில் 'வேர்த்ததோ'...........
பாவம் அந்த இரவில் குருட்டு ஈ ,
அங்கேயே..........
மெல்ல ஊர்ந்து அதன்பின் பல்லி
இதோ ஈயைக் கவ்விக்கொண்டது
பெரிய ஈ பிடியிலிருந்து தப்பிக்க முயலுது
பல்லி, ஈ இடையே போர்
ஈயைக் குதறிய பல்லி
அதை விழுங்க முயல
ஈ நழுவி கீழே விழ,
பல்லிக்கு வாயில் கிடைத்தது
விழுங்க முடியலையே கோபம் ............
கீழே விழுந்துக் கிடந்த ஈ
சிதைந்து, துடித்து அடங்கிவிட்டது
அதன் ஆவி பிரிந்தது.............
உயிர் உயிர்தானே ...............
எனக்குள் ஈக்கு பரிதாபம், 'பீலிங்'

டீ.வ ஆன் பண்ணி 'நேஷனல் ஜாக்ராபிக்'
சேனல் பார்க்க..... அதில்
பதுங்கி பதுங்கி வந்த வேங்கை ஒன்று
தனித்திருந்த மான்குட்டியைக் கவ்விக்கொண்டு
ஓடியது............


காலையில் எழுந்து
செய்தித் தாளை பிரிக்க
முதல் பக்கத்தில்..............செய்தி
'பாலியல் பலாத்காரம்'
கால் சென்டர் பனி முடிந்து
இரவில் வீடு செல்ல இருந்த
இளம்பெண் ....அலுவலகத்தில்
உள்ளேயே கதைவடைக்கப்பட்டு
கற்பழிக்கப்பட்டாள்..... சிதைந்த
சடலம் அலுவலகம் வெளியே...புதரில்.

இரவில் பார்த்த அந்த சுவரில்
நான் பார்த்த காட்சி, கண்முன்னே
பல்லி தன பசி தீர்த்துக்கொள்ள
முயன்றது...........
இங்கு ஒரு காமவெறியன் தன
காமத் பசி தீர்த்துக்கொள்ள.....

'சந்தர்ப்ப சூறையாடல்'
'பசி' 'பசி, வெறி, வெறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Aug-18, 5:36 am)
பார்வை : 57

மேலே