நம்பிக்கை

இதை யாருடைய கற்சிலை
மா மேதை இன்னார் ஒருவருடையது,
சரி அந்த சிலைக்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
அந்த அவர் சிலைக்கு என் வணக்கங்கள்
சரி அவர் போய் எத்தனை வருடங்கள் ஆகின்றன
ஐநூறு வருடங்கள் என்று பெரியோர் கூறுகிறார்கள்
சரி அவரை நீ பார்த்ததுண்டா ?
இல்லை; என்ன இப்படி இருக்கிறது உங்கள் கேள்வி
இல்லையப்பா....... யாரோ சொன்ன ஒருவர்
இவர்தான் அவர் என்று யாரோ சொல்ல
நம்புகிறாய் நீ .................... ஆனால்
அந்த கோவிலில் கற்சிலையாய்
சிற்பி செதுக்கி ஆகம பூஜை வைத்து
கடவுள் என்று போற்றப்படும் கண்ணபெருமானை
நீ கண்டுகொள்வதில்லையே
அதுவேறும் சிலை என்கிறாயே ஏன்
இவரையும் யாரோ எப்போதோ கண்டுதான்
அப்படி வடிவு கொடுத்திருக்கிறார்
அந்த 'அவரை' நம்பும் நீ
இந்த 'இவரை' நம்ப மறுப்பதேன்
கேட்டால் 'ஆன்மிகம்' 'மூடநம்பிக்கை' என்பாய்
இரண்டையுமே , இரண்டு உருவங்களையும்
நீ கண்டதில்லை, ஒன்றை நம்புகிறாய்
மற்றோன்று....கடவுள் .....இல்லை என்கிறாய்
எது மூட நிம்பிக்கை , யார் மூடன்...................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Aug-18, 10:07 am)
Tanglish : nambikkai
பார்வை : 585

மேலே