தனிமையின் உளறல்கள்

எனக்கென உன்னிடம்
தூது செல்லவோ,
உன் காதில் எந்தன்
ஆசை சொல்லவோ,
யாருமில்லை..
என் காதலைத் தவிர..
இரவில் தலையணை நனைத்திடும்
இவள் கண்களின் ஈரம்,
என்றுதான் உன்னைச் சேர்ந்திடுமோ..?
சேரும் முன் அதுதான் காய்ந்திடுமோ..?
நீ கடந்து செல்லும் பாதையில்,
உன் பின் தொடர்ந்தே வருகிறேன்..
உன் கடைக்கண் பார்வை தரும்
நினைவுகளை மனதோரம் கோர்க்கிறேன்..!!
என்றுதான் தீருமோ என்
தனிமையின் உளறல்கள்..!!? 😒