சங்கத் தமிழ்ப்பா தலைவியே கண்ணால் என்னை தங்கமே சுட்டிடாதே

சங்குக் கழுத்த வளேகண்ணால் பார்ப்பாய்நீ
சங்கத் தமிழ்வெண்பா ஒன்றுநான் தந்திடவோ
சங்குசுட் டாலும்நற் தூயவெண் மைதரும்
சங்குநான்இல் லைசுடா தே
-----இன்னிசை வெண்பா

சங்குக் கழுத்த வளேகண்ணால் பார்ப்பாய்நீ
சங்கத் தமிழ்வெண்பா ஒன்றுநான் தந்திடவோ
சங்குசுட் டாலும்நற் தூயவெண் மைதரும்
சங்குக் கழுத்தினில் முத்து அணிபவளே
சங்கத் தமிழ்ப்பா தலைவியேகண் ணால்என்னை
தங்கமே சுட்டிடா தே !

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (2-Aug-18, 9:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே