அவளழகு
என்னவளே உன் அழகை
என்னென்று சொல்வேனடி
அவற்றைக் காணும்
என் கண்ணிரண்டும் வாய்போல்
அல்லவா அவ்வழக்கை பருகுகின்றன
பருகப் பருக தெகட்டா தேனமுதாய்
உன்னழகு இருக்க ..........என் பருகும்
கண்களும் அயர்வதில்லை-அதுதான்
மூடித்திறக்க இமைகள் தந்தோனோ இறைவன்
அந்த ஒரு சில நொடி கண் மூடி திறக்க
அலுப்பாரா மீண்டும் மீண்டும் உன் அழகைப்
பார்த்து பருகிக் கொண்டே நான் இருக்க
வற்றா தேனமுதுண் வதனம், உன்னழகு
தீரா தாகம் கொண்ட என் கண்கள்
இதன் தாகமும் தீருமோ............