காதலித்துப் பார்

காதலித்துப் பார்!
உலகம் அறைக்குள் சுருங்கும்...
சிலநேரம் அறையே உலகும் ஆகும் !
காதலித்துப் பார்!
விசைப்பலகையில்
விரல் நுனிகள் விளையாடியது உண்டா?
வசைக்கூட இசைபோல வாங்கியதுண்டா?
சில வார்த்தையே மாற்றி மாற்றி
சலிக்காமல் மணிக்கணக்காய்ப் பேசியதுண்டா?
காதலித்துப் பார்!
ராத்திரியில் ஆந்தை ஆவாய்...
அந்தியில் அசுவம் ஆவாய்...
காதலித்துப் பார்!
மாதம் முதல் வாரமே
மணிபருசைக் கருக்கலைப்புச் செய்வாய்...
காதலித்துப் பார்!
காதலின் வெளிப்பாடு
கோபத்தில் முடியலாம்!
சிலநேரம்...
தாபத்தில் முடியலாம்!
காதலித்துப் பார்!
பெண்மையில் ஆளுமை,
ஆண்மையின் அடங்கியல்,
இரண்டும் ஒருசேர
ஓரிடம் காண்பாய்!
காதலித்துப் பார்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (6-Aug-18, 12:42 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : kaathalithup paar
பார்வை : 181

மேலே