கங்கை

நான்முகன் செய்த பாதபூஜை
நாராயணனின் பாதம் பட
நங்கை கங்கை அவதரித்தாள்

புனிதவதி அமராவதியில் வாசம் செய்தாள்

முன்னோர்கள் சாபம் நீங்க
முனிவேடம் பூண்டு
முடிசூடிய பகிரதன்
முயன்றான் தவத்தை
மூச்சை அடக்கி
முகத்தை நிமிர்த்தி
முழங்கை உயர்த்தி
முயற்சித்தான் முழுமனதோடு
முற்பட்டான் முன்னேறினான்
முடிவில் கண்டான் கங்கையை

புவிக்கு வரவேண்டும் என்றான்
புன்னகையுடன் சம்மதித்தாள்
புயல்போன்ற வேகத்தை குறைக்க
புலித்தோல் ஆடை அணிந்தவனை வேண்டினான்
புனிதன் சிவன் பூரிப்படைந்தான்
புதியபேர் பெற்றான் ஈசன், கங்காதரன் ஆனான்

மலையில் பிறந்தாள்
மக்கள் பாவத்தை போக்கினாள்
மஹாபாரதத்தை தொடங்கிவைத்தாள்
மங்காபுகழ் கொண்ட பீஷ்மரை ஈன்றெடுத்தாள்
மத்தியிலே நின்றுவிட்டாள்

இந்திரலோகத்திலிருந்து இமயம் வந்தவள்
இந்திய முழுக்க வர இயலவில்லை
இன்னொரு பகிரதன் வேண்டும்
இன்பத்தமிழ்நாட்டிற்கு வருவதிருக்கு


வடக்கில் வெள்ளம் தடுக்க
விந்தியத்திற்கு அப்பால்
வறட்சி போக்க
விவசாயம் பெறுக
விவசாயி வாழ
வரவேண்டும் கங்கைதாய் தென்னகத்திற்கு
வாராய் நீர் வாராய்
வாடா மகிழ்ச்சியை தாராய்

எழுதியவர் : Venkatram (6-Aug-18, 11:50 pm)
சேர்த்தது : Venkatram
Tanglish : kankai
பார்வை : 313

மேலே