வேண்டும் ஒரு கலைஞர் - சி எம் ஜேசு

முன்னாள் முதல்வர் டாக்டர்
கலைஞர் அவர்களுக்கு ஜேசுவின் கவி
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

தமிழின செம்மொழியே
கலைத்தாயின் கனி உருவே

நூற்றாண்டுகள் காண வா நீ எழுந்து வா

எழுந்து வா எழுந்துவா
தமிழினத்தின் தன்மானமே எழுந்துவா

எழுந்துவா எழுந்துவா
இதயத்தில் உதிப்பவனே எழுந்துவா

எழுந்துவா எழுந்துவா
எழுச்சிமிகு ஆட்சி காண எழுந்து வா

எழுந்துவா எழுந்து வா
இணையற்ற கலையுருவே எழுந்துவா

எழுந்துவா எழுந்து வா
திராவிடர் தம் நீதி காண எழுந்துவா

எழுந்துவா எழுந்து வா
விடியும் பொழுதாய் எழுந்து வா

எழுந்துவா எழுந்து வா
தமிழகமே தலைநிமிர எழுந்துவா

வடியும் எங்கள் கண்ணீர் போக்க
வாடிப்போன முகத்தை காக்க

எழுந்துவா எழுந்து வா
உதய சூரியனே எழுந்துவா

இடியும் உள்ளம் மடியும் உணர்வு
வந்திடாமல் எழுந்து வா

வினைகள் தீர்க்க கதைகள் உரைக்க
விதைகள் துளிர்க்க பசுமை நிறைக்க

எழுந்துவா எழுந்து வா
தொண்டர்க்கு அன்பு கடிதம் எழுத எழுந்துவா

வசனம் பேசி வாழ்த்து சொல்லி
வருங்காலம் வாழ ஆசி நிறைக்க

எழுந்துவா எழுந்துவா
புத்தகங்களின் அணிந்துரையே எழுந்துவா

அண்ணாவின் ஆசை தம்பி
பெரியாரின் அறிவு தம்பி - உம்

எழுத்துக்களை முத்தாய் உதிர்க்க நீ
எழுந்து வா எழுந்து வா

திரையுலகின் கலை மகனே
எழுத்துலகின் எழுதுகோலே

இயக்கங்கள் தயக்கங்கள் ஆக கூடாதென
எழுந்துவா தலைவா எழுந்துவா

அதிகம் உழைத்து உலகம் தன்னில்
தன்னீகரற்ற நீண்ட ஆயுளை உடைத்தவரே

உரைகள் கூறி கறைகள் போக்கி
அறிவை தெரிய செய்தவரே எழுந்து வா

மக்களின் செல்வந்தரே
தமிழினத்தின் சொல் வேந்தரே

மஞ்சள் துண்டும் கருப்பு கண்ணாடி கொண்டும்
எழுந்துவா எழுந்துவா

உம்மை பார்க்க பேராவல் கொண்டு
உம்முன்னிலையிலே முழந்தாள் பணிந்தோம்

எழுந்து வா எழுந்து வா
திராவிட இயக்க உயிர் ஊற்றே எழுந்து வா

இசைக்கலைமணி சி .எம் .ஜேசு பிரகாஷ்
வேளச்சேரி சென்னை - 42.

எழுதியவர் : சி .எம் .ஜேசு (7-Aug-18, 6:50 pm)
பார்வை : 96

மேலே