என்னவென்று

தேனுக்கு மாற்றாய் முதலில் தமிழை சுவைத்தாயோ
உன் பேச்சில் மட்டும் இத்துணை சுவை
தமிழை பாலாக குடித்து குடித்துவிட்டாய் போலும்
உன் நாவில் மட்டும் சொற்கடல் பாய்கிறது
மழலை மொழியின் இன்னொரு நகல்
உனது பேசும் புதுமை
கனத்த குரலில் காந்த ஈர்ப்பு கொண்டு
தமிழை வார்ப்பித்துவிட்டாய் நீ
உன்னை படைப்பித்த பிரம்மனை பிரமிக்கவைத்தாய்
உனது மொழியாற்றல் படைப்பு கொண்டு
செங்கரும்புயென சுவைத்தந்தாய்
தித்தின் சுவை முடிவதற்குள் களவுபோனது செங்கரும்பு
சொல்லின் கர்த்தா எனவா
தமிழின் தந்தை எனவா
வார்த்தையின் பிறப்பிடம் எனவா
நாவலின் சுரங்கம் எனவா
கதையின் உற்று எனவா
என்னவென்று உனைநான் சொல்ல
அத்தனையிலும் வேர்பார்த்த உன்னை
அதையாவது சொல்லி சென்றாய எந்தமிழ் ஆசானே !

எழுதியவர் : டேவிட் ஸ்ரீ (9-Aug-18, 4:08 pm)
சேர்த்தது : davidsree
Tanglish : ennavendru
பார்வை : 85

மேலே