என் செல்லக்குட்டி

அழகு பெற்றெடுத்த என் குட்டி தேவதையே...!

உன் சின்ன முகம் பார்த்தால்
என் சிக்கல்களும் தீர்ந்துவிடும்...

உன் பிஞ்சு விரல் பிடித்தால்
என் மனமெல்லாம் மகிழ்ச்சி பாெங்கும்...

உன் காெஞ்சும் சிரிப்பினிலே
என் கவலைகளும் கலைந்துவிடும்...

உன்னாேடு இருக்கும் நேரம்
மட்டுமே எனக்கு அழகிய நேரம்...

எழுதியவர் : பிரியா (9-Aug-18, 5:31 pm)
Tanglish : en sellakkutty
பார்வை : 512
மேலே