வினாக்கள்

அன்போடு உனை அழைக்கிறேன்
என்னோடு சண்டைக்கு

உன் வாதச் சண்டையில்
உன் பிடிவாதம்
தலைத்தூக்குமா ???

உன் பிடிவாதம்
என் கடிவாலத்தை
இறுக்குமா ???

என் கடிவாலத்தின்
வலிமையை
உன் பாசக்கயிரின்
வலிமை
ஜெயிக்குமா ???

உன் பாசக்கயிறின்
வலிமைக்கு
என் இதயத்தின்
வலிகள்
புரியுமா ???

என் இதயத்தின்
வலிகளுக்கு
மருந்திட கடனாக
உன் இதயத்தை
தருவாயா ???

என் கடனுக்கு
அசலுக்கு மேல்
வட்டியாக என் இதயத்தை
தருகிறேன் என்றால் வாங்க
மறுப்பாயா ???

வட்டியை வாங்க
மறுத்தால்
மரணமே நீ
அக்கணமே எனை
ஆட்கொள்வாயா ???

எழுதியவர் : (9-Aug-18, 10:46 pm)
சேர்த்தது : joதி
Tanglish : vinakkal
பார்வை : 57

மேலே