ஊடலால் நொந்த அவள் அவனுக்கு விடும் தூது
அன்பே இப்படி நீ
என் மீது கோபித்து
ஒன்றும் பேசாது
மௌனமாகிவிட்டாய் ,நானும்
உன்னோடு இப்போது
இருப்பதுபோல் ஒரு முகமாய்
உன்னோடு பேசுவதை
நிறுத்திக் கொண்டு
மௌனமாகிவிட்டால் .................
இருவர் மௌனத்திலும்
உன் ஊடலுக்கு ஓர்
பதில் கிடைக்குமோ?
நம் காதலுக்கு புத்துயிர்த்தருமோ
இந்த நம் இருவர் மௌனம்,
இந்த மௌனம் ..............
இதையே ஒரு வேள்வியாய்
கடைபிடிப்போமா , அன்பே
ஆனால் ஒரு போதும்
இந்த ஊடலை நீடித்து
ஊடலால் காதலை
கலைத்துவிடாதே .....
குருவி கூட்டை கலைப்பதுபோல்
அது என் உடல் கூட்டையே
அழித்துவிடும் நம்பு