என்னவனே, என் இதயக்கனி நீயே
என்னவனே ,பார்வையின் மோதலில் வந்தது
ஓர் உறவு அதுவே காதல் நமது
காதலித்து என்னுளத்தில் புகுந்துவிட்டாய் நீ
அங்கு இப்போது என் இதயத் துடிப்பாய்,
நீதான் என் இதயத் துடிப்பு, இனி
நீ இல்லையேல் நான் இல்லையே
என் இதயமே நீதானே , நீ அல்லவோ நான்,
இனி நீயும் நானும் வேறல்லவே
என் இதயக்கனியே , என்னவனே, நீயே .