சின்னப் பெண்ணே
தத்தி வந்திடும் முத்துச் சரமே
தாவி வந்திடும் தமிழின் வரமே,
முத்தும் மணியும் வேண்டாம் மகளே
முத்தமிழ் எழுந்து நடந்திடும் அழகே,
பத்தரை மாற்றுப் பொன்னே நீயும்
பாரே போற்ற நடந்திடு பெண்ணே,
சித்திர வடிவே சிரிக்கும் அழகே
சிறக்கும் உன்னால் புவியின் அழகே...!