பாராப் போகிறாயே
காதல் கனியமுதே!
யாதும் நீயெனவே!
வாழும் எளியவனே!
வாஞ்சை மனங்கொண்டு,
ஏங்கி கேட்கின்றான்!
என்னவளே!
ஏங்கி கேட்கின்றான்!
பாராப் போகிறாயே...
நீரா விழிவழிய;
பாராப் போகிறாயே!
கடிதம் தந்து பார்த்தேன்!
தேன்மலரை ஈந்து பார்த்தேன்!
வான்மங்கை மனமுருகும்
நனிகவியும் பாடிப் பார்த்தேன்!
இத்தனையும் தந்து பார்த்தேன்!
இப்பித்தனையும் தந்து பார்த்தேன்!
ஊரெல்லாம் எனைப் பார்க்க
உன்பின்னால் அலைந்து பார்த்தேன்!
சொர்க்க வாசல் தேவதையோ?
சொப்பனத்தைக் கலைந்து பார்த்தேன்!
என்
இருவிழிகள் தறிக்கெட்டு
அலைவது தான்,
உன்
கருவிழிக்குத் தெரியலயா?
இல்லை!
உன்
கயல்விழியைக் கவர்ந்திழுக்கும்
வழிவகை தான்
என் மனதும் அறியலயா?
பாராப் போகிறாயே...
நீரா விழிவழிய;
பாராப் போகிறாயே!
பார் கார்முகிலே!
பார்!
உன் கருமலரின்
தேன் சுவைக்க
அலைமோதும்,
என்
விழிவண்டை விழித்துப்பார்!