மேகம் சிந்தும் கண்ணீர்த்துளி 555

பெண்ணே...

நிலா பெண்ணுடன் கொண்ட
காதல் தோல்வியில்...

மேகம் சிந்தும் கண்ணீர்
மழையாக மண்ணில் விழுகிறது...

என் கண்களில்
வடியும் நீர்துளிக்கு...

காரணம் தெரியாமல்
இருக்கலாம் பலர்...

கலங்கவைத்த உனக்கு
கூடவா கரணம் தெரியவில்லை...

யார் என்று நீ தூக்கி
எறிந்த காகிதம்...

ஓர்நாள் காத்தடியாக
விண்ணில்...

அன்று நீயும் பார்ப்பாய்
உன் தலை உயர்த்தி நிச்சயம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Aug-18, 4:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 866

மேலே