காதல்
என்னுயிராய் நீ
என் மன்னவா
உன் உயிர் நானல்லவா
இப்படி நம்
காதல் ராசியில்
உயிர்களின் பரிவர்த்தனை
இது ஒன்றே போதும்
அன்பே நம்மை
எப்போதும் எப்படியும் வாழவைக்க
தனிமை நம்மை பிரிக்க முயலினும்
இந்த உறவு தனிமையிலும்
இனிமைக் காண வைக்கும்