மீட்டெடுப்பாயா?
![](https://eluthu.com/images/loading.gif)
தாங்கி பிடிக்க உன் விரல்கள் இருக்கின்ற தையிரியத்தில் தான்
மீண்டும் மீண்டும் விழுந்திட ஆசைகொள்கிறேன்...
நான் விழுந்திடகூடாதென்று
பதறி அள்ளியணைக்கும்
உன் கைகளுக்கு எப்படி சொல்வேன்!
எழமுடியா ஆழத்தில் உன்னில்
விழுந்துவிட்டேன் என்பதை...
விழிகளென்னும் காந்த கயிறு
கொண்டு உன் காதலில் விழுந்த
என்னை மீட்டெடுப்பாயா😍