இந்திய ராணுவம் ---பாடல்---

பல்லவி :


இந்திய தேசமே
இது எங்களின் சுவாசமே...
புண்ணியப் பூமியில்
எங்கும் பூக்களின் வாசமே... (2)
அந்நியர் ஆயிரம் இதை அழித்திட முனைந்தால்
பாயும் தோட்டாக்கள் பேசுமே...
காஷ்மீர் அமைதியை தினம் கலைத்திட நினைத்தால்
மூட்டும் சிதைகளில் வீசுமே......

இந்திய தேசமே......


சரணம் 1 :

நண்பராக எல்லோரும்
காவல் காத்து நிற்போமே...
நல்லிரவு ஆனாலும்
எங்கள் கண்கள் தூங்காதே...

தடையினை உடைத்தே
விதியின் வழியினில் நடப்போம்...
படையெனத் திரண்டே
எதிரியின் கதையினை முடிப்போம்...

உதிரம் குடித்து உதிரும் பூக்கள் சிவக்குதே
நதியின் அலைகள் குருதிப் புனலாய்ப் பெருகுதே... (2)

கண்ணீர் சிந்தும் கண்களில்
கனலும் பொங்கிடுமே - அது
தீங்கு செய்யும் பகைவரின்
உயிரை வாங்கிடுமே......

இந்திய தேசமே......


சரணம் 2 :

ஆயுதங்கள் ஏந்தியே
மக்கள் வாழ்வை காப்போமே...
காயங்கள் வந்தாலும்
எங்கள் கடமை நீங்காதே...

எதிரியை அழித்தே
இனிதாய் சுகமதைக் கொடுப்போம்
சதிகளை முறித்தே
புதிதாய் சரித்திரம் படைப்போம்...

தினமும் வெடித்துச் சிதறி ஜீவன் அடங்குதே
மனித உயிர்கள் இறந்தப் பிணமாய் ஒதுங்குதே... (2)

மண்ணில் எங்கும் மக்களின்
துயரம் தீர்த்திடவே - தினம்
வேங்கை போல வலிமையில்
பகையை வென்றிடுவோம்......

இந்திய தேசமே......

எழுதியவர் : இதயம் விஜய் (21-Aug-18, 12:54 pm)
பார்வை : 2981

மேலே