நீயின்றி நானில்லை---கட்டளைக் கலித்துறை---

கட்டளைக் கலித்துறை :


வைகறை :
========

பொன்றூவும் செங்கதிர் பூங்கமழ் வீசும் பொழிலருகில்
இன்னிசைச் சந்தம் இசைத்தோடும் ஓடைநீர் ஏழ்பரியோன்
முன்விரி பங்கயம் மூங்கிற் துளைவந்து மூச்சிலோடும்
தென்றல்புள் ஓசைகள் தேன்றர வைகறை திருப்பொழுதே...


நீயின்றி நானில்லை :
=================

விடங்குடித் தெந்தை விழுநிலை மாற்ற விளைபயிரின்
கடுந்தவம் ஏற்றிங்குக் காவிரி நீரே கரைகடந்தே
உடற்புகுஞ் செம்புனல் ஊனுயிர் காத்தற்போல் செம்புலம்பாய்
உடற்குளிர்ந் தன்னை உளமகிழ்ந் தென்றன் உயிர்வளர்ப்பாள்...


முதுமையும் இனிமையும் :
=====================

நரைவந்தே நெஞ்சுக்குள் நாணற்போல் ஆடுது நாளுமின்பம்
நுரையென்றே அன்புக்குள் நோய்கள் உடைந்தோடு மாயமன்று
மரையன்ன வோருயிர் வான்றரும் நீரோர் உயிரிணைந்து
தரையிங்கே சொர்க்கம் தரும்முது மைக்கால வாழ்வினிலே...

எழுதியவர் : இதயம் விஜய் (22-Aug-18, 7:16 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 371

மேலே