கையில் சிக்காத இடை
மழை கொட்டி தீர்த்தது,
***இமை கொட்டாமல் பார்த்தது.
நிலர்க்குடையின் கீழ் அவள்,
***நிறக்குடையின் கீழ் நான்.
குடையின் வெளியே தூரல்,
***குளிர்மனத்தின் உள்ளே சாரல்.
யாரும் இல்லா மறுகில்,
***வந்தாள் என் அருகில்.
மழையில் நனையாத உடை,
***கையில் சிக்காத இடை.
இருளை துளைக்கும் மின்னல்,
***இதழில் குழைத்தாள் கன்னல்.
இணைத்தது இருமனம்,
***விரைவில் திருமணம்.