வாடிக்கை வேடிக்கை

ஏன் பிறந்தேன்
ஒரு அறிவுடன் என்று வியந்ததிற்கு
சற்றே சுதந்திரம் பெற்று
வெளிவந்த கிளி எடுத்தாண்டது
என் பிறப்பு பத்திரத்தை
சிறு நெல்மணி கிடைக்கும் என்று .....

மண்ணுக்குள் நான் கிடக்க
மண் புழு சத்துணவு ஊட்டியதாம்
மெல்ல மூதலிக்க முத்தமழை சிந்தியதாம்
மூச்சுத் திணரலை முறியடிக்க
சுற்றத்தை கூட்டி துப்புறவு செய்ததாம்......
முதலில் வெளியே போய்விடு என்று ....

ஏன் என் மீது இவ்வளவு அக்கரை என்றதற்கு
போட்டுடைத்தது ஒப்பந்தத்தை...

என்னை கடத்திய ஊர் குருவி
என்னை கொறிக்க தாமதித்ததால்
நான் பிழைத்தேன் ....இன்று
மரமாக வளர்ந்தேன்....
மண் புழுவிற்கு அடைக்கலமும்
கொம்பு தேன் சமச்தானத்திற்கு
கனியும் தங்க வசதியும்
சுற்றம் சூழ கேளிக்கை நடத்தவும்
கோளாட்சி புரியவும்
உயில் தரித்தேன் அன்போடு
மண் புழுவின் ஆணைப்படி !

ஆறரிவு ஆன்மாக்களோ
கல் எறிந்து என் சுற்றத்தை சீண்டவும்
கனிகளை அங்க பிண்டமிடுவது
வாடிக்கை வேடிக்கை !
ஏனெனில் அவர்தம் கர்வம் பிதற்றுவது
தைரியம் நம்பிக்கை கைவசமிருக்க
மண்ணையும் விண்னையும் ஆளலாம் என்று !

எழுதியவர் : (28-Aug-18, 10:13 pm)
Tanglish : vaadikkai vedikkai
பார்வை : 38

மேலே