புகுந்த வீடு

முன் சக்கரம் படும் அவச்தையை
பின் சக்கரம் கேட்க நாதியில்லை !
அதற்கும் மேலாக சவாரி செய்பவனோ
போகும் வழி தவறியும்
மிதிமிதிக்கிறான் அவசரத்தோடு !

மூவினம் பெற்றெடுத்த குருதி சிந்தா சுதந்திரம்
மன்னர்கட்கு மகுடி கொடுத்தது ,,,,,
ஓர் இனம் ஆதிகத்தை அரசுவழி நிலை நாட்ட
உள்துறை சீமான் புகுந்த வீடு பட்டியலிட .....
இன்று
தேர் திருவிழா கைகோர்க்க
இந்தியனுக்கு இரட்டிப்பு ஆதரவு தொட்டி தோறும் !
முன் மொழிந்த கொச்சைகள் மூடி மறைத்து
வந்தேரி நீ சரித்திரம் படைத்தாய் ....
காட்டை காணடைத்து நாட்டை சீராக்கினாய்
பிறகு தன் இனத்தை வெட்டி
சிறை சாலைக்கு கப்பம் கட்டினாய் ..
இதனாலே
விவாதமற்ற வரலாறு வாய் பிளக்க
மதயானை முன் வைக்கிறது
மட்டக் களப்பு மானியம் !

எழுதியவர் : (30-Aug-18, 7:31 pm)
Tanglish : pukuntha veedu
பார்வை : 42

மேலே