நெடுநாள் கனவே

கனவே காட்சி யானாயோ?
கண்ணீர் கசியச் செய்தாயே
கனவினுள் ஊடுருவி வந்தாயே
நனவிலே நெடுந்தொலைவில் நின்றாய்
துறைமாறி தூரமாகிப் போனோம்
கதிரொளி மறைய முளைத்தாய்
தந்தை பின்னிருந்து தோன்றினாய்
அறிந்தேன் நிலவல்ல மதுவென்று
ஆம்
திகைக்கச் செய்த என்தோழியே!
மகிழ்ச்சியில் மொழிகள் மௌனமாயின
தொலைவில் தெரியும் சிறுபுள்ளியாய்
இருள்சூழ கருவிழிவிட்டு அகன்றாய்

தோழமை தொலைவால் தூரமாவதில்லை

உணர்வுகளை ஊற்றெழச் செய்பவை

எழுதியவர் : ப.அமுதா (31-Aug-18, 9:46 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : nedunaal kanave
பார்வை : 465

மேலே