அவள் காத்திருக்கிறாள் நீரோடைக் கரையில்

பூமலர்கள் வரம் வேண்டி நிற்கின்றன
புன்னகையுடன் அவள் வரவேண்டும் என்று
பூந் தென்றல் வரம் வேண்டி நிற்கிறது
மெல்லியலாள் அவள் வரவேண்டும் என்று
பூங் குயில் பாடாமல் நிற்கின்றன மரக்கிளையில்
அவள் கொலுசொலி இசைக்க வரவேண்டுமென்று
அவளோ காத்திருக்கிறாள் நீரோடைக் கரையில்
கவிதைத் தமிழ் பாட நான் வரவேண்டும் என்று.......

எழுதியவர் : கவின் சாரலன் (1-Sep-18, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே