கொச்சகக் கலிப்பா

இன்றைக்கு வாட்ஸ் அப் தகவல்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை, தினமும் சாப்பிடுகிறோமோ அல்லது தூங்குகிறோமோ ஆனால் வாட்ஸ் அப் தகவல்களைப் பார்ப்பதால், நம் பொன்னான நேரமெலாம் வீணாகிறது.

அப்படி ஏதாவது நல்ல விஷயமானாலும் பரவாயில்லை, வந்தததே திரும்பத் திரும்ப வருகிறது, ஒருவர் அனுப்பியதையே மற்றொருவர் அனுப்புகிறார். தொல்லைகளே அதிகம். குப்பைகள் குவிகிறது, வைரங்கள் காணாமல் போகிறது. என்ன செய்வது, முடிவில் ஸ்மார்ட் போன் வேண்டாமென்று சாதா போனுக்கே மாறிவிடும் நிலமை அவலம்.

===================================================

புலனத்துள் புழுக்களெலாம் புதியெனவாம் என்றுசொல்லி

பலவகையாய்க் குப்பைகளுள் பக்குவமாய் நுழைகிறது.!

இலக்கென்று ஒன்றுமில்லை இலக்கணமும் அதற்கில்லை.!

அலப்பரையும் செய்துகொண்டு அரைகுறையாய் அலைகிறது.!



தப்பான செய்திகளைத் தவறாமல் பரப்பிடுவார்

எப்போதோ நடந்ததையே இப்போது நடப்பதுபோல்

அப்படியே நகல்செய்து அடக்கியதை வாசிப்பார்

எப்படிப்பா ஈதெல்லாம்.! எங்கேயோ உதைக்கிறதே.?
================================
கொச்சகக் கலிப்பா

பொருள்:: புலனம்:: வாட்ஸ் அப்

நன்றி:: கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (1-Sep-18, 5:17 pm)
பார்வை : 69

மேலே