காதல் தீவு
தனிமைத் தீவில்
துணையின்றி வாடும்
கலை மானாய்
தவித்தது என் காதல்
உன்முகம் காணும் வரை
என் பெண்மானே!
அழகிய பொன்மானே
நம் கண்படும்
தூரமெல்லாம்
இளம் சிட்டுக்களாய்
கரம் கோர்த்து
இவ்வழகிய
காதல் தீவெங்கும்
கவலையின்றி நாம்
சுற்றித் திரிவோமா !
அஷ்ரப் அலி