கன்னியின் கண்கள்

கருங்குழியின்
கவர்ந்திழுக்கும்
கவர்ச்சிதனை

இருவிழியில்
இவளிடத்தில்
இன்றுகண்டேன்

ஒருவழியாய்
எதிர்கொண்டு
எழும்பொழுது

திருவிழியால்
சிறைபிடித்துச்
சென்றுவிட்டாள்!

எழுதியவர் : நாகேந்திரன் (4-Sep-18, 12:15 pm)
சேர்த்தது : நாகேந்திரன்
பார்வை : 416

மேலே