கவிதை யுத்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
நான் என்னவளுக்காக எழுதிய
கவிதைகளுக்கு மத்தியில் கலவரம்
யார் இதில் சிறந்த வரிகளை
உடைவன் என்று..
எதற்காக இச்சண்டை??
காரணம் என்னவாக இருக்குமென்று
யோசித்தேன்;
இறுதியில் தான் தெரியவந்தது,
அவள் மனதில் நிரந்திரமாக
இடம் பிடிக்க வேண்டுமாம்!!!!!
என்ன சொல்லி புரிய வைப்பேன்
என் கவிதைகளிடத்தில்
அதற்காகத்தான் நானும் அனுதினமும்
போராடிக் கொண்டிருக்கிறேன் என்று!!!!
ஒரு வேளை நானும் அவளை
விரும்புகிறேன் என்று சொன்னால்
என் கவிதைகள் அனைத்தும்
தற்கொலை செய்து கொள்ளுமோ??
இல்லை மாறாக மனம் மாறி
நான் அவள் மேல் கொண்ட காதலை
அவளுக்கு உணர்த்தி
என் உயிர் சேர்க்க உதவுமா???
என் கவிதைகளின் பதிலுக்காக
காத்துக் கொண்டிருப்பவனாக,
❤சேக் உதுமான் ❤