கஷ்டத்துக்குள் வாழாமல் இஷ்ட்டத்துக்குள் வாழ நினைப்பதால் - சி எம் ஜேசு

அழகான வாழ்வின்
இன்பம் சிதைக்கப்படுகிறது
அறிவான செயல்கள் மறுக்கப்படுகிறது

இயற்கையான பாசம் மறக்க படுகிறது
இனிமையான சுவாசம்
நம்மை விட்டு அகன்று விடுகிறது

குடும்ப உறவுகள் பிரிக்கப்படுகிறது
குணத்தின் நலன்களெல்லாம்
மாற்றம் பெறுகிறது

வீட்டை சாராமல்
நாட்டை சாராமல் நடை பிணமாகி
வீழ்ச்சியுறும் வேதனையில்
வாழ்வு முடிந்து விடுகிறது

கல்வி காசானதால்
நல்லெண்ணங்கள் பாடங்களாகாமல்
கலைகள்யாவும் நிலைகள் மாறி போனது

குருகுலம் மறைந்து போனதால்
தெருக்கூடல் அதிகமாகி அதன்
செயல்களின் விதி மீறுகிறது

வீட்டை அலங்கரித்து விட்டு
ரோட்டை அசிங்கப்படுத்தும்
அநாகரீகங்கள் உருவாகிறது

சுயநலன்கள் தங்கி
பிறர் நலன்கள் மங்கி
இன்பமான வாழ்வை
மயக்கத்தால் மாற்றிவிடுகிறது

அரசரென்று சொல்லும்
நாட்டின் தலைமைகள்
சட்டத்தை மட்டும் பார்ப்பதால்
இயற்க்கை இடிந்து மடிந்து போகிறது

நல்லவாழ்வுக்கும்
தீமை வாழ்வுக்கும் அர்த்தம் புரியாமல்
உலகம் கலகத்திலேயே
உலா வரும் நிலையாகி விட்டது

ஒரு தனி மனிதன் தான் உலகம்
ஒரு தனி மனிதனின் ஒழுக்கம் தான் வீடு

ஒரு தனி மனிதனின் நன்மை செயல்கள் தான் நாடு
ஒவ்வொரு தனி மனிதரும் நல்லவரானால்
உலகம் உளத்திற்குள் அகப்பட்டு விடும்

அறிவை தெரிந்திருந்தாலும்
அகத்தை கேட்டு திருத்தும் பெறுவோம்

அகமும் அறிவும் நோயுற்றிருந்தால்
யுகம் நமக்கு பயமாகி பேயாகிப்போகும் - முன்னெடுப்போம்
இஷ்டத்திற்குள் வாழாமல் கஷ்டத்திற்குள் வாழ

ஆயுள் நீண்டு அமுதம் உண்டு அறிவை மொண்டு
இயற்க்கை செழிக்கும் இன்பம் காணுவோம் - சி எம் .ஜேசு பிரகாஷ்

எழுதியவர் : c m jesu prakash (6-Sep-18, 9:26 am)
பார்வை : 76

மேலே