பூவைக்கு பூ வை

வெண்ணிலவே
ஒரு நாளில்
மஞ்சள் நிறம்
மாறும் போது
வெள்ளை சேலை
அடையாளம்
தேவைதானா
விதவைக்கு

விதி தந்த
கோலம்
விதவை என்றாகி
விட்டால்
மதியுடனே
மனம் மாற்றிடுவோம்
அவளை
மறுமணம் செய்ய
போற்றிடுவோம்

இளமைக்கு
துறவு வாழ்க்கை
சூட்டியது
சமூகப் பார்வை
உணர்வுக்கு பூட்டு போட
அவள்
உள்ளம் என்ன குப்பை
கிடங்ஙா ?

பூவை என்ற பெயரே
பூக்களை
சூடுவதற்கே
பாவை அவள்
பொலிவிழக்க
பூக்களை மறுப்பது ஏன் ?

சம்பிரதாய சடங்குகளுக்கு
இறுதி அஞ்சலி
செலுத்திவிட்டால்
இனி
வரும்
உலகுக்கு
வருந்தி வாழ தேவையில்லை
பிறப்பது ஒரு முறை தான்
இருக்கும் வரை
மகிழ்ச்சியில்
திளைத்திடவே...
மூட பழக்கங்களை
மூலையில்
தூக்கி எறிய வேண்டும்
வருங்காலம்
இளைஞர்கள் கையிலே
தொடர வேண்டும்
ஆழ்ந்த சிந்தனையில்
பூவில்லாத பூவையரை
பூ சூட்ட.......!

எழுதியவர் : த பசுபதி (6-Sep-18, 11:03 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 86

மேலே