இந்த நாள் நகர்வில்
பெற்ற பிள்ளைகளுக்கு கிடைக்கும் பேரன்பு
பெற்றோர்களால் மட்டுமே
ஆனால் அதை உணர்ந்து கொள்ள முடியாத குழந்தைகள்
பெற்றோரை உதாசீனப் படுத்தும்போது
தான் துவண்டாலும்
தன் குழந்தை கலங்கி விடக் கூடாது என்று
வெளியேற விடாத கண்ணீர் கண்ணுகுள்ளேயே,
கொஞ்சமேனும் இரக்கமற்ற சில பிள்ளைகளால்
எங்கு சென்றாலும் முக வாட்டத்துடன்
அநேக வயது முதிர்ந்த பெற்றோர்
தங்கள் கரங்களால்
தூக்கி வளர்த்து ஆளாக்கி பேராக்கி திருமணமும்
ஊர்போற்ற செய்து
உள்ளமில்லாம் பூரித்து நின்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர் அன்று ,
இன்று சில பெற்றோருக்கு அந்தக் கண்ணீர்
வேதனைக் கண்ணீராய் வழிகின்றது.
தாங்களும் வளர்ந்து விட்டோம் ,இனி நமக்கு நாமே
எனும் தனிப்பட்ட சுயநலமே இதற்கு காரணம்,
இதைத்தான் அன்றய பழமொழி ஓன்று ஞாபகப்படுத்துகிறது
[நெருப்பை ஊதிவிட்டு கொள்ளிக் கட்டையை எறிந்துவிடுவதாகும் ]
அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்து விட்ட இன்றய சமுதாயம்
இதையும் சிந்தனையில் சீராக்க முற்பட வேண்டும்
இன்றய பெற்றோர் அன்றய இளைஞர் என்பது நிஜம்
இந்த நாள் நகர்வில் அந்த நாள் ஞாபகம் பெற்றோர் மனதில் .
வாழ்கை எனும் சக்கரத்தில் முறைமுறையாய் அனைவரும்.