கண்களால் எரியும் பந்து

=========================
நானும் நீயும் ஒரே வீதியில்
நாளும் பொழுதும் பயணம் செய்கிறோம்
உன்னை நானும் என்னை நீயும்
கனவில் சந்திக்க சயனம் கொள்கிறோம்

விழிகளைத் திறந்து கனவுகள் கலைத்து
உறக்கத்தை அனாதையாய் விட்டு விடுகிறோம்
மௌனத்தை வைத்து காதலை பேசி
இதயத்தை அன்பினால் தொட்டு விடுகிறோம்

யாரோ எழுதும் கவிதையை வைத்து
காதலை வளர்க்கப் பாடு படுகிறோம்
வளரும் காதலை யாரும் பார்த்தால்
திசைகளை மாற்றி ஓடி மறைகிறோம்

நீ கண்களால் எரியும் காதல் பந்து
என் இதயத்தைச் சுற்றியே விழுகிறது
பருவத்தின் காற்றில் பறந்து வந்து
மாறாத வியாதிபோல் தொற்றியே கொள்கிறது
***மெய்யன் நடராஜ்
கஸல் மாதிரி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Sep-18, 2:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 258

மேலே