ஒரு தலை காதல்
நிழல் என்று நினைத்ததால் இன்று நிம்மதி இழந்தேன்!
உயிர் என்று நினைத்தால் உயிரையும் கொடுப்பேன்.
உணர்வுடன் இருக்க என்னை தேடினேன்,
கண்ணீர் வந்து சொன்னது காணவில்லை என்று!
அவள் அன்பை தேடி இனி அலய மாட்டேன்!
அவள் நினைவுகளுடன் இனி அழ மாட்டேன்!
அவள் போல் யாரையும் பார்த்தால் புருவம் உயர்த்த மாட்டேன்!
அவள் பெயர் சொல்லி அழைத்தால் கூட புன்னகை செய்ய மாட்டேன்.
என்னை மட்டும் தேட வேண்டும்!
எங்காவது இருந்து கிடைத்திட வேண்டும்!
அதற்கு மட்டும் அவள் உதவிட வேண்டும்!
அன்று மட்டும் கடைசியாக அவளை ஒருமுறை பார்த்திட வேண்டும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
