ப்ரியப்பட்ட டேஷ் - 3

ப்ரியப்பட்ட டேஷ் -3
==================

இலக்கம் கூடிவிட்ட
லேண்ட்லைன் எண்ணிற்கு
ப்ரபஞ்சத்தின்
ஒரு முனையிலிருந்து
எத்தனையோமுறை அழைத்திருப்பாய்தான்,
சிலவேளை நானும்,

எல்லாம் மாறியதோடு
உன் அந்த உபகரணங்களும்
மாறியிருக்கக் காணும்,
செல்ஃபோன் ப்ரவேசத்தினால்
மனனம் செய்துவிட்ட
எத்தனை எத்தனை எண்கள்
யோசிக்கும்போது
சட்டென்று முன் வருவதே இல்லை
சந்திப்புகளின்
எண்ணிக்கைக் கூடும்போது
ப்ரியப்பட்டுக் கடந்துபோனவர்களின்
எண்கள்
கால ரப்பரினால்
நினைவின்கண் காகித்திலிருந்து
அழிக்கப்பட்டுப்
போய்க்கொண்டே இருக்கும்
ஒரு டாடா (Data) என்ட்ரீ க்களைப் போல்

ஒரு துண்டுச் சிட்டையின்மூலம்
பரிமாறிக் கொண்ட
அந்த எண்கள் தான்
நம் வார்த்தைகளின்
முதல் முகவரியாக இருந்திருக்கின்றன.
அந்த எண்கள் தான்
நாம் பேசிக் கொண்ட முதற்கவிதையாக இருந்திருக்கின்றன
அதிக நாட்களாகியும்
அழைத்திராத
அந்த எண்கள் தான்
நம் முதல் ஸ்பரிசமாக இருந்திருக்கக் கூடும்
மனனத்தில் கல்வெட்டுகளாகி
பூ விடர்த்தும் கல்லறையாகி
நியாபகங்களுக்கெல்லாம் முதலிடமாகி,
எல்லாமுமாகி
அந்த எண்களே தொடரும்,
களைந்துவிடும் மனமில்லாமல்
பத்திரப்படுத்தி யிருக்கிறேன்,
முதல் சிரிப்பொலிகளை,
முதல் முத்தங்களை,
நம்மிடையே ஒலிப் பரப்பிய
எண்களை

ஆர்குட் காலங்களுக்குப் பிறகுள்ள
நம் வரவு,
முடிவுற்ற வாக்கியங்களுக்குப் பின்
ஒரு முற்றுப் புள்ளியாய்,
சற்று நாம் அகலே அகலேப் போய்விட
அதனினும் சிறியதாய்,
அதேதோ ஏதுமற்றதுவாய்
போயிட்டப்போதும்,
ப்ரதானமாய் ஆக்கிரமிக்கின்றன
பிறந்தநாளிலும்
நமக்கென விதிக்கப் பட்ட
ஏதோ ஓரிரு
நல்ல நாட்களிலும்
அருகே, இங்கெங்கும் தேடி,
இல்லாமல் போய்விடும் கறுப்பு நாட்களிலும்,
நம் எண்கள்
வாழ்ந்து கொண்டிருக்கலாம்
அழைப்பதற்கான
அழைத்ததற்கான
அழைத்தும் அகப் படாததற்கான
நொடிகளைக் கடந்து
எங்கோ இருந்தபடி
அவை நம் விரல்களால் ஸ்பரிசிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கலாம் தானே..
இதோ
உபகரணம் தொலைத்துவிட்ட
உன் எண்களை
தழுவியப்படி பார்க்கிறேன்
காத்திருப்புகள் தளும்பிய விழிவெளிகளால்
முத்தமிடுகிறேன்.
ஆனால்,
அதிகப்பட்ச அணைப்பிற்குட்பட்டு
கோபத்திற்கப்பால்
வதைப்பட்டு
எச்சிலால்
வார்ப்புருக்கப்பட்டு
பொலிவிழந்த உபகரணம்,
அலசுகிறப் போதெல்லாம்
என் நினைவுக் கூருகளிலிருந்து
அது களைந்த இடம்
அகப் படாமலேயே விலகிப்போகிறது.

ஹேப்பி பெர்த்டே ....

அனுசரன்.

எழுதியவர் : அனுசரன் (15-Sep-18, 4:55 am)
பார்வை : 29
மேலே