உரம் நீ
துளிர் விடா என் தாவரத்தில்
பூக்களை பூக்கவைத்தாய் நீ ..
உரம் நீ !
மூர்ச்சையுற்ற உடலில் மிஞ்சிருக்கும் ஈரம் நீ ..
உரம் நீ !
நித்தம் மாறும் காட்சிகளில்
பிழையில்லா ஓவியம் நீ ..
உரம் நீ !
வெளுத்துப்போன என் வானவில்லில்
செவ்வண்ணம் நீ ..
உரம் நீ !
வற்றிப்போன காட்டுக்குளத்தில்
இறுதி நீர் துளி நீ ..
உரம் நீ !
இல்லாத கிளைகளில்
எழுகின்ற துளிர் நீ ..
உரம் நீ !
விரைகின்ற இளமையில்
வெளுக்காத நரை நீ ..
உரம் நீ !
விண்ணுக்கும் மண்ணுக்கும்
நூற்கள் வேயும் மழைத்துளிகள் நீ ..
உரம் நீ !
நாவசைக்கும் வெண்கல மணியில்
ஓசையற்ற அதிர்வு நீ ..
உரம் நீ !
- வேலனார்