ஆரோக்கியமான வாழ்க்கை

முன்னுரை : ஆரோக்கியம் பற்றி பேச துவங்கும் முன் ஆரோக்கியம் என்பது இருவகைப்படும் என்பதை கூற விரும்புகிறேன். மன ஆரோகியம் உடல் ஆரோக்கியம் என்று இருவகை உள்ளது.

விளக்கம்:
உங்கள் வாழ்வில் கடைசி வரை தேவை நல்ல உடல் ஆரோக்கியம் அதாவது உடல் வலு . நீங்கள் செய்ய வேண்டிய வேலையை உற்சாகமாக செய்ய தேவை மன ஆரோக்கியம். நல்ல உடல் வாகு தேவை என்பதை அழகாக இருப்பது மட்டும் அல்ல…..நல்ல உடல் எடையும் அதற்கேற்ற உடல் உயரமும் தான். நீங்கள் சாப்பிடும் உணவுகளில் மட்டுமல்ல ஆரோக்கியம்…தினசரி செய்யும் உடல் பயிற்சிகள் மற்றும் சூரியன் வெளிச்சம் மூலமாக கிடைக்கும் வைட்டமின் டி யும் தான்……உடல் பயிற்சி செய்ய நீங்கள் எங்கேயும் போக தேவையில்லை இதோ உங்கள் வீட்டில் மொட்டை மாடி போதும்…ஆம் காலை மாலை மாடி படி ஏறி இறங்குங்கள்…மாடியில் சிறிது நேரம் நடை பயிற்சி செய்யுங்கள்….இதை விட சிறந்த பயிற்சி எதுவும் இல்லை……சரி உணவில் எவ்வாறு கவனம் செலுத்துவது??☺️…..இதோ….நீங்கள் சாப்பிடும் உனவில் ருசியுடன் பசியும் இருக்க வேண்டும்….நன்கு பசித்த நேரத்தில் உண்ணுங்கள்…காலை மதியம் உணவுகளுக்கிடையே இடைவேளி சிறிது மணி நேரங்கள் இருக்க வேண்டும். கீரை வகைகள், பழங்கள் உங்கள் உணவில் எடுத்து கொள்ளுங்கள். நொருக்கு தீனிகளை குறைத்து கொள்ளுங்கள்.
சரி மன ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய…..நல்ல புத்தகங்களை வாசியுங்கள்…நல்ல இனிமையான இசையை கேளுங்கள்,மனம் விட்டு பேசுங்கள், குடும்பத்துடன் வெளியே சென்று வாருங்கள். அவ்வப்போது நட்பு வட்டாரத்துடன் உரையாடுங்கள். தெய்வ நம்பிக்கை உடையவர்கள் சிறிது நேரம் தெய்வீக பாடல்களை கேளுங்கள். கோவில் குளம் சென்று வாருங்கள்……. குழந்தைகளுடன் நீங்களும் விளையாடி மகிழுங்கள். நெகட்டிவ் எண்ணங்கள் இல்லாதவாறு பார்த்து கொள்ளுங்கள். இதுவே உங்கள் மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்து கொள்ளும்.

எழுதியவர் : Bhagyasivakumar (17-Sep-18, 11:59 am)
சேர்த்தது : Bhagyasivakumar
பார்வை : 9003

மேலே