ஒற்றை ரவை

அட்டையில் இல்லை புத்தகத்தின் சாரம்
வீரனென தோன்றிட தேவையில்லை தேகம்
ஒற்றை உயிரினால் தீர்ந்தது தாகம்
கத்தியும் வேலும் போருக்காய் இல்லை
புத்தியும் பொறுமையும் தோற்றதாய் இல்லை
வெறும் காலால் நடந்தே கடல் தாண்டி சென்றான்
பேரும் புகழும் எந்நாட்டிற்கே தந்தான்
அறவழி போரை அறிமுகம் செய்தான்
ஒற்றை ரவையாய்(தோட்டா) மொத்தமாய் சாய்த்தான்
தன்னுயிர் நீத்தும் மண்ணுயிர் காத்தான்
மறுபடியும் பூத்தால் மாண்டிட மாட்டான்

எழுதியவர் : ப்ரஹன் (18-Sep-18, 2:56 am)
சேர்த்தது : ப்ரஹன்
பார்வை : 1705

மேலே