ஏன்டா என்னை படைச்சே

*ஏன்டா என்ன படைச்சே*
😟😟😟😢😢😢😢😢😢
வீடு தோறும் வரியும் வச்சே
வீதியில கோயில் வெச்சே...
கருவறையினு சொல்லி வச்சே
கடவுளுனு பேரு வச்சே...
குடமுழுக்க பன்னி வச்சே
தளமெனக்கு பளிங்கி வச்சே..
நிலங்கூட எழுதி வச்சே
நிதி திரட்ட உண்டி வச்சே....
அறங்காவல் குழுவும் வெச்சே
அதில் எம்பேரு எழுதிவச்சே...
சாமியினு கைகூப்பி
சாயுங்கால படையல் வச்சே...
நல்லதுனக்கு நடந்துவிட்டா
நகையும்கூட செஞ்சு வச்சே...
கிடா வெட்டி பொங்க வச்சே
உறவினர திங்க வச்சே...
பணமெனக்கு கொடுத்துவச்சே
பயம் போக்க வேலும் வெச்சே...
பாதுகாப்பு வேனுமின்னு
மூனு கேட்ட பூட்டி வச்சே...
உதவாக்கரை பயலுவல
உண்டியல திருட வச்சே...
பார்த்தாலும் பேசாம
ஊமையாக
படைச்சு வச்சே ...
மனசார அனுதினமும்
மனுசங்கள வேண்டிக்கிறே...
எனை தூக்க ஒரு கூட்டம்
ஏற்பாடு செஞ்சிருச்சு...
படைச்சு வச்ச மனுசங்களே
பாதுகாப்பு தாருங்கய்யா...
சிலை திருட்டு
சொல்லை கேட்டா
சிலுக்குதய்யா முடிகளெல்லாம்...
க.செல்வராசு...