காதல் அறிகுறி

கைகளையும் கண்ணாடியாய் நினைத்து முகம் பார்க்கிறேன்
எப்பொழுதும் எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்
பசியையும் அறியாமல் பைத்தியமாகிறேன்
உறங்கும் பொழுதும் உளறுகிறேன்
என்னுயிருக்குள் இன்னொரு உயிரை சுமப்பதுபோல் உணருகிறேன்
இனம்புரியாமல் மனதுக்குள் எதோ இன்னிசை ஒலிப்பதை கேட்கிறேன்
வாசலையே பார்த்துக்கொண்டு யார் வருகைக்காகவோ காத்திருக்கிறேன்
வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் நாள்தோறும் எண்ணுகிறேன்
இவையெல்லாம் காதல் அறிகுறி என்றால் என்னுள் காதல் வந்ததை எண்ணி வியக்கிறேன்
காதல் ஆரம்பத்திலே எனக்குள் இவ்வளவு சுகம் என்றால்
இந்த காதலின் இறுதிவரை சென்று அணைத்து இன்பங்களையும் அடைய போகிறேன்!!!