மழை 3

மழை 3

மேகத்தைக் கிழித்து
மின்னலைக் கொடுத்து
மேகத்தைப் பிழிந்து
தாகத்தை தீர்த்துவிடு!

சோகத்தைக் கரைத்து
சுகத்தை வளர்த்து என்
சொந்தங்கள் வாழ்ந்திட
மண்ணுக்கு வந்துவிடு!

நிலத்தில் விழுந்துநீயும்
நிறத்தை மாற்றிக்கொண்டு
நீண்ட நதியில்சேரும்
ஒரு நிகழ்வை தந்துவிடு!

புன்செய் நன்செயென்று
போகும்பாதை எல்லாம்
நன்மைசெய்ய நீயும்
நானிலம் வந்துவிடு!

எழுதியவர் : கவி இராசன் (26-Sep-18, 11:46 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 3024

மேலே