குழலினிசை
ராதை இசை பாடினாள்
கண்ணன் குழல் ஊதினான்
யமுனை ஹரி ஹரி எனும்
நாம அலையில் ஆடுதே !
கோபியார் நடம் ஆடினர்
கோபியருடன் கண்ணனும் உடன் ஆடினான்
யமுனையும் எழுந்து அலைக்கைகளை
கண்ணன் மேல் வீசி ஆடுதே !
அலையில் ஆடிடும் யமுனை
ஆகாய நிலா பொழியுது அமுதை
அழகிய இதழ்களில் கண்ணன் குழலினிசை
ஆனந்த ஏகாந்தத்தில் கண்ணனுடன் ராதை !