உரைநடை

தோல்வியைக் கண்டு கலங்காதே;
வேதனையைக் கண்டு விலகாதே;
துன்பத்தை துச்சமாக்கி,
புன்னகையை புதுமையாக்கி,
வேதனையை விட்டொழித்து,
கண்ணீரை மூழ்கடித்து,
முயற்சியை விண்ணாக்கி,
விடியலை எதிர்நோக்கு..
விடியலை வீணாக்காமல்,
விடிந்தபின் யோசிக்காமல்,
வெற்றியை இலக்கணமாக்கி,
வாழ்க்கையை உரைநடையாக்கு.

எழுதியவர் : கௌசல்யா ஜெயக்குமார் (29-Sep-18, 8:14 pm)
சேர்த்தது : kowsalya jayakumar
பார்வை : 57

மேலே