ஆசை ஆசை

எனக்கும் முத்தம்
மேல் _ஆசை./
உன் இதழால்
பெறவே_ஆசை./

எனக்கும் மடி மீது
தலை சாய்க்க _ஆசை./
உன் மடியாக அது
அமையவே_ஆசை./

முழு நிலவை முற்றத்தில்
இருந்து ரசிக்க _ஆசை/
அவையும் உன்னுடன்
இணைந்தே ரசிக்க_ஆசை./

மோகங்கள் முட்டி
மோத வேண்டும் என்று_ஆசை./
அவை உன்னிடம்
மட்டுமே என்று _ஆசை./

தாகம் தனிய வேண்டும்
என்று _ஆசை/
உன்னால் தீர வேண்டும்
என்பதே என் _ஆசை./

தூக்கம் விழித்து கண்கள்
சிவக்க வேண்டும் என்று _ஆசை./
உனக்கும் எனக்குமான இடையில்/
உள்ள இன்ப நினைவால்
மட்டுமே என்று_ஆசை./

காலம் காலமாக
காதலிக்க_ஆசை/
அது உன்னை மட்டுமே
கடைசி மூச்சு நிறுத்தும் வரை
காதலிக்க _ஆசை./

உச்சந் தலை வரை
உன் கோபம் காண _ஆசை;
கண்ட பின்னே திட்டு
வாங்கி அழ _ஆசை./

ஆசை ஆசை ஆசை
இத்தனையும் உன்னால் உருவான_ஆசை./

ஓசை கொடுக்காதே /
என் ஆசையை தடுக்காதே /
மடக்காதே கிடங்கில் புதைக்காதே / புதைத்தாலும் கிழங்காய் /
விளையும் ஆசை
உன்மேல் உள்ள ராசா./

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (4-Oct-18, 3:26 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : aasai aasai
பார்வை : 241

மேலே